ஆபத்தான நிலையில் இலங்கை! மஹிந்தவின் எதிர்காலம் என்ன? தேரர் வெளியிட்ட ஆருடம்
இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் மிகவும் பழமை வாய்ந்த தேரர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த தேரர், அரசியல் நிலவரம் குறித்த பல தவல்களை வெளியிட்டுள்ளார்.
மஹிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி சில ஆரூடங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஸ்ரீ விக்ரமசிங்க யுகம் போன்றதொரு காலமாகும். அரசியலில் பல்வேறு குழப்ப நிலை காணப்படும். எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் இந்த நிலை இன்னும் தீவிரம் பெறும்.
ஜோதிட கணிப்பின்படி இந்தத் தகவல்களை வெளியிடுவதாக தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பௌத்த மஹா சங்கரத்தினருக்கும் மிகவும் கஷ்டமாக காலம் ஒன்று உருவாகும்.
ராஜசிங்க காலத்து கடமை முறைக்கமைய தேரர்களுக்கு வேலை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் தற்போதைய நிலை தொடர்பில் நன்மையான மற்றும் தீமையான பல ஆரூடங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
சில ஆரூடங்களை பெயர் விலாசத்துடன் அவர் வெளியிட்ட போதிலும் அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


Comments
Post a Comment