ரயிலில் யாசகம் எடுத்தால் கைது- சட்டம் கடுமையாக அமுல்


ரயில் பயணிகளின் நன்மை கருதி ரயிலில் பின்பற்றப்படும் சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தவகையில், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத வியாபாரத்தை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரயில்களில் யாசகம் கேட்போரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Comments