பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதீர்கள் !!
கடந்த பல வருடங்களாக வடக்கிலும்,கிழக்கிலும் மக்களை நிம்மதியாக இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிய சிலர் இன்று தமிழ் மக்களை பார்த்து பரிதாவ கண்ணீர் விடுவதை பார்க்கின்ற போது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது.
அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியிருந்த முன்னாள் பிரதியமைச்சர் ஒருவர் கிழக்கில் ஆட்சி செய்கின்ற முஸ்லிம் முதலைமைச்சர் தமிழ் பேசும் தமிழர்களை திட்டமிட்ட சகல விடயங்களிலும் புறக்கணிப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மக்களால் தமிழின துரோகி என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் ஆயுத முனையில் செய்ய முடியாது போன சில விடயங்களை இப்போது செய்ய முடியும் என பகல் கனவு காண்பது வேடிக்கையாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 11ஆசனங்களை கைப்பற்றிய தமிழ் கூட்டமைப்பு ஆட்சியமைக்காது முஸ்லிம் காங்கிரசிடம் முஸ்லிம் ஒருவரை முதலைமைச்சாராக்கியது தப்பு என கருத்துப்பட தனது நச்சுக்கருத்துக்களை அப்பாவி மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் ஒற்றுமையை சீரளிக்கலாம் என நினைப்பது மடமைத்தனமாகும்.
கடந்த கால கருப்பு தினங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அண்ணன் தம்பியாக பழக ஆரம்பித்திருக்கும் மக்கள் மத்தியில் வேற்றுமை கருத்துக்களை விதைத்து மக்களை முட்டாள்களாக்கி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள எடுக்கின்ற முயற்சிகளை இனிவரும் காலங்களில் கைவிடுவது நன்று என ஆலோசனை கூற விரும்புகிறேன்.
முதலில் அமைந்த கிழக்கு மாகாண சபையில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் உங்களுடைய பால்ய சினேகிதன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திர காந்தனுக்கு முதலைமச்சர் பதவியை வழங்கியபோது எந்த முஸ்லிம் சகோதரனும் உங்களை போன்று இனவாத முத்திரையுடன் அலைந்து திரியவுமில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். சகோ.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு முதலமைச்சர் கிடைக்கும் என்று வாக்களித்த சகல மக்களும் அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுகொண்டனர்.
இனிவரும் காலங்களிலாவது மக்களிடம் இனவாதம் பேசி மக்களை உசுப்பி விடுவதை தவிர்த்து சரியான பாதையில் ஜனநாயகமாக, சிறந்த தலைமைத்துவத்தால் வளர்க்கப்பட்ட போராளியாக நடந்து கொண்டு உங்கள் மக்களின் பிரச்சினைகளையும்,அபிவிருத்திகளையும் பெற்றுகொடுக்க முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
நூருல் ஹுதா உமர்
மு,தலைவர்
தேசிய இளைஞ்ர் சேவைகள் மன்றம்
பிரதேச சம்மேளனம் - காரைதீவு.மற்றும் மாவட்ட சம்மேளனம் - அம்பாறை


Comments
Post a Comment