மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் 08 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நேற்று அனுமதி வழங்கினார்.
தனிப்பட்ட தேவை காரணமாக ஐக்கிய அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணி முன்வைத்த மனு தொடர்பிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment