சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆள் பற்றாக்குறை


சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கும் கடிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு போதியளவு ஊழியர்கள் தம்மிடம் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் என்.ஆர். அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிறுவர் துஷ்ப்பிரயோகம் தொடர்பாகவே கூடுதலான கடிதங்கள் வருவதாகவும் அவை தமது திணைக்களத்தில் நிறைந்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் தொடர்பாக வடமேல் மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் நிகழ்விலேயே சொலிசிட்டர் ஜெனரல் என்.ஆர். அபேசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments