முகநூலில் சண்டை பிடிக்கும் எம்பிக்கள் கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வில் மௌனம் சாதிப்பது ஏன்?


திருகோணமலையில் மூன்று முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதை யாவரும் அறிவோம்.

அதிலும் மூன்று பேரும் கிண்ணியா மகான்கள். இவர்கள் மூவரும் மாவட்ட மக்களின் பிரச்சினைகளையும் ஏனைய சில அபிவிருத்திகளைச் செய்வதிலும் வல்லமை படைத்தவர்கள் .இருந்தபோதிலும் முகநூலில் ஆளுக்குஆள் சில விவாதங்களை அபிவிருத்தியில் நான்தான் செய்தேன் என்றவாறு பல நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.

அதிலும் சிலர் ஊடக அறிக்கைகள் ஏராளம் நடந்தது ஒன்றுமே தெரியவில்லை, மக்களுக்கும் அது புரியவில்லை .இப்படியான எமது எம்பிக்கள் நிலையறிந்து கிண்ணியா தளவைத்தியசாலை மத்தியரசின் கீழ் கொண்டுவர பாடுபடவேண்டியவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு இவர்களே ஆப்படிக்கிறார்கள் கிண்ணியாக்காரனை ஏமாற்றுகிறார்கள்.

இது காலாகாலம் எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வீராப்புப் பேச்சு மஊடகங்களுக்கு படம்காட்டுதல் ,முகநூலில் விவாதங்கள் பொய்யான அறிக்கைகள் வாக்குறுதிகள் என இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்புகளே தவிர எமது சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேசுவதற்கு முன்வருதலில் கவனங்கள் குறைவாகவே உள்ளது.

இனியாவது சிந்தியுங்கள்.

எமது மாவட்ட பிரதிநிதிகளேமக்களின் துயரங்களில் பங்கெடுங்கள்.

கிண்ணியா தளவைத்தியசாலை யை தரமுயர்த்த யாவரும் ஒன்றுபடுங்கள்.

அதைவிடுத்து பொய்வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் விதைக்க துனைபோகாதீர்கள்.

Comments