விக்டோரியா மற்றும் கொத்மலை வலய விவசாயிகளுக்கு காணி உறுதி பத்திரங்கள்


விக்டோரியா மற்றும் கொத்மலை வலய விவசாயிகளுக்கு காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

மகாவலி குடியேற்றத்தில் உள்ளவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

2016ஆம் ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தின் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மிகுதியை இந்த வருட இறுதிக்குள் பூர்த்திசெய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த காணி உறுதிகள் வழங்கப்படுவதன் மூலம் இலங்கையின் மேலும் ஒரு தலைமுறையினர் பூமிக்கான உரிமையைப் பெறுவது மாத்திரமின்றி, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு உறுதுணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Comments