மலாலா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு
மலாலா யூஸுப் சாய் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் வசித்து வரும் மலாலா அண்மையில் நோபல் விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தனது உயர்தரக் கல்வியை பர்மிங்கஹாம் லேடி மாகரிட் ஹோல் கல்லூரியில் சிறந்த முறையில் முடிவு செய்த மலாலா, தனது உயர் தரப் படிப்பிற்கு அரசியல் விஞ்ஞானாம், பொருளியல் மற்றும் தத்துவவியல் ஆகிய துறைகளில் தோற்றி அதி சிறப்பு சித்தி அடைந்ததனாலே அவருக்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டவரான மலாலா யூஸுப் சாய் பெண்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 2012ம் ஆண்டு தலிபான் போராளி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர்த்தப்பியவர். இதனை தொடர்ந்து பர்மிங்ஹாம் நகருக்கு குடிபெயர்ந்த மலாலா தனது 20 வயது நிறைவில் பாகிஸ்தானின் பிரதமர் பெனாசீர் பூட்டோ கற்ற துறையினை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment