(வீடியோ).,மெளலானாவிற்கு ஓர் நியாயம். ஹிஸ்புல்லாவிற்கு ஓர் நியாயமா.? ஹக்கீமிடம் பகிரங்க கேள்வி எழுப்புகின்றார் உதுமான்கண்டு நாபீர்..

Ihzana Fareed

கடந்த 20.08.2017 அன்று காத்தான்குடியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினாலும் ஏறாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர்  மெளலானாவினாலும் கொண்டு வரப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டுள்ள நகர சபை கட்டங்களை திறப்பதற்காக கிழக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் ஹிஸ்புல்லாவும், அலி ஷாஹிர் மெளலானாவும் சகல விதத்திலும் புறக்கணிக்கப்பட்டு முதலமைச்சரின் அழைப்பின் பெயரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூஃப் கிபத்துல் ஹக்கீம் விஷேட அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக இரண்டு நகர சபை கட்டங்களும் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு பிற்பாடு ஏறாவூரில் பிரதமர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் விஷேட அதிதியான அமைச்சர் அப்துர் ரவூஃப் கிபத்துல் ஹக்கீம் உரையாற்றிய பொழுது உள்வீட்டு அரசியல் பிள்ளையான அலி ஷாஹிர் மெளலானாதான் ஏறாவூர் மண்ணுக்கு நகர சபை கட்டத்தினை கொண்டு வந்தார். ஆகவே முதலமைச்சர் அவரினை புறக்கணித்து அரசியல் செய்வதானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் சதித்திட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை அலி ஷாஹிர் மெளலான கட்சிக்கு பெற்றுத்தந்தவர். அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் எதிர்கொள்ளப்போகின்ற தேர்தல்களில் அலி ஷாஹிர் மெளலானவின் ஆதரவு வாக்குகளை ஏறாவூரில் பெற்றுகொள்வதில் முயற்சியுடனும், நம்பிக்கையுடனும் செயற்பட வேண்டும். எனவே மட்டக்களப்பில் இடம் பெறுகின்ற எந்த அபிவிருத்திகளாக இருந்தாலும் அலி ஷாஹிர் மெளலானாவின் நாமம் அதில் பொறிக்கப்பட்டு அவரினை முதலமைச்சர் கெளரவப்படுத்த வேண்டும் என உரையாற்றினார். 
இவ்வாறு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மறுபக்கத்தில் வெளி வீட்டு அரசியல் பிள்ளையான ஹிஸ்புல்லா காத்தான்குடிக்கு நகர சபை கட்டத்தினை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் 30 இலட்சம் ரூபாய்களை தனது சொந்த நிதியில் இருந்து ஒத்துக்கி பூர்த்தியாக்கப்பட்டுள்ள காத்தான்குடி நகர சபை கட்டத்தினை திறப்பதற்கு கிழக்கு முதலமைச்சரினால் அனுமதி வழங்கப்படாமல் அரசியல் பழிவாங்கப்பட்டமையினை அதே மேடையில் புறக்கணித்து உரையாற்றிய விடயமானது எந்த விதத்தில் நியாயம் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் பகிரங்கமாக கேட்க விரும்புவதாக தெரிவிக்கின்றார் சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர்.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர்… அவ்வாறு அலி ஷாஹிர் மெளலானாவினை மட்டும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் விழித்து உரையாற்றியமையானது,  எதிரே வருகின்ற தேர்தலினை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் வெற்றியினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.  நகர சபை கட்டட திறப்பு விழாவில் மெளலான முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்டிருப்பதினாலும், அலி ஷாஹிர் மெளலானாவிற்கு ஏறாவூரில் அதிகப்படியான செல்வாக்கு இருப்பதினாலும், வருகின்ற மாகாண சபை தேர்தலில் முதலமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 
இதனை எப்படியாவது கட்சியின் தலைமை நிவர்த்தி செய்து கொடுக்கும் அதே நேரத்தில் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் வெற்றியினை உறுத்திப்படுத்தும் கட்டாய தேவைப்பாட்டுக்குள் கட்சியின் தலைமை தள்ளப்பட்டுள்ளது. எனவேதான் முன்னாள் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை தரக்குறைவாக உரையாற்றி சொந்த மண்ணிலேயே அவருடைய அரசியலினை சூனியமாக்க வேண்டும் என்பதே முக்கிய கருப்பொருளாக அமைச்சர் ஹக்கீமின் உரையில் தெளிவாக காணப்பட்டது. இது முஸ்லிம் கட்சி ஒன்றுக்கு தலைமை தாங்குகின்ற ஒரு தலைவனுக்குறிய பன்பாக தெரிய வில்லை. மாறாக உலக அரசியலினை கலையாக கொண்டு அரசியல் நாடகத்தினை அரங்கேற்றுகின்ற தலைவனுக்குறிய பன்பாகவே நாபீர் பெளண்டேசன் பார்க்கின்றது.
எங்களுடைய பார்வையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய காரண கர்த்தாவாக இருந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களுக்கு பிற்பாடு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற சகல திறமைகளும், பன்புகளும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கே இருக்கின்றது.  ஏன் என்றால்.? அவருடைய சகல விதமான ஆளுமை, செயற்திறன், மக்களோடு மக்களாக பழக கூடிய பன்பாடு, மக்களுடைய பிரச்சனையினை அறிந்து செயற்படக்கூடிய செயற்திட்டம், அனைத்தும் அவரிடம் காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் இரஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசியல் ஊடாக சரி அல்லது ஹிறா பெளண்டேசன் ஊடாக சரி அரசியலில் காத்தான்குடியினை மட்டும் மையப்படுத்தி தனது அரசியலினை முன்னெடுக்க வில்லை.
மாறாக கல்குடாவினை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான ஆசிரியர் மற்றும் அரச நிருவாக வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால்தான் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கல்குடா ஓட்டமாவடியில் இருக்கின்ற தபால் நிலையம், பிரதேச செயலக கட்டிடம், பொது சந்தைக்கட்டிடம், 1990 ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரையான அனைத்து வீதி அபிவிருத்திகளும் ஹிஸ்புல்லாவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்றே ஏறாவூருக்கும் ஹிஸ்புல்லாவினால் வரலாறு படைக்குமளவிற்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினை எவறாலும் மறுத்துரைக்க முடியாது. அத்தோடு நின்று விடாமல் அம்பாறை தொடக்கம் ரெதிதென்ன வரைக்கும் பிரயாணத்தில் ஈடுபடுகின்ற பொழுது அமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை காணக்கூடியதாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. 
அந்த வகையிலே தூய்மையான அரசியல் கலாச்சாரத்தினையும், அரசியல் பன்புகளையும் குர் ஆனினை சுமந்துள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினை போன்றவர்கள் அரசியலில் 25வருடங்கள் அனுபவத்துடனும், கிழக்கில் அபிவிருத்திகளுக்கு இலக்கனமாய் இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நாபீர் பெளண்டேசனின் ஆணித்தரமான கருத்தாக இருக்கின்றது என தெரிவிக்கின்றார் அதன் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்.
மேலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரினால் சர்வதிகார அரசியல் கலாச்சரத்தினால் குறித்த இரண்டு நகர சபை கட்டிடங்கள் திறக்கப்பட்டமை சமப்ந்தமாகவும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு நிகழ்ந்துள்ள அநீதி சம்பந்தமாக பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்த முழுமையாக கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Comments