பிரதமருக்கு ஆசி வேண்டி கல்முனை பிரதேச செயலகத்தினால் துஆ பிராத்தனை !
எமது நாட்டின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 40 ஆண்டு கால மக்கள் சேவையினை முன்னிட்டும்,அவரின் நீண்ட கால ஆரோக்கியத்துக்குமான துஆ பிராத்தனை நிகழ்வு (2017/08/04) கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த் பிராத்தனை நிகழ்வானது பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி அவர்களின் தலைமையில் கல்முனை நகர் ஜாமிஆ ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இவ் துஆ பிராத்தனை நிகழ்வின் பிரதான சொற்பொழிவு மெளலவி செட் செயினூதீன்(முப்தி) அவர்களினாலும் ,துஆப் பிராத்தனை மெளலவி எம் இர்பாத்(முப்தி) அவர்களினாலும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மதரஸா மணவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
(கல்முனையூர் அப்றாஸ்)


Comments
Post a Comment