பக்கச்சார்பாக அதிர்வு நிகழ்ச்சியை வழிநடத்தும் முஷாரப் !!
குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியை கண்ட வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு எனும் அரசியல் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் சகோதரர் முஷாரப் அவர்களின் செயற்பாடு பல நேரங்களில் அதிருப்தியாக அமைந்து விடுகிறது.
வசந்தம் தொலைக்காட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் இருக்கும் போது ஊடக அனுபவம் குறைந்த சகோ.முஷாரப் அவர்கள் இந்த நிகழ்வை தொகுத்து வழங்க முன்வந்தது பாராட்ட தக்கதாகும்.
என்றாலும் இந்த நிகழ்ச்சியை முஷாரப் அவர்களுடன் இணைந்து நெறிப்படுத்தும் தனராஜ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காது தான் மட்டுமே சகலதும் அறிந்தவர் போன்று செயற்படுவது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் தமிழ் பேசும் சகலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இது சம்பந்தமாக பலரும் சுட்டிக்காட்டியும் சகோ.முஷாரப் தனது தவறை திருத்திகொள்வதாக தெரியவில்லை.
அத்துடன் தனது அரசியல் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களில் தனக்கு சாதகமானவர்கள் வந்தால் கழுவுற மீனில் நழுவுற மீன் போன்று தனது கேள்விகளை தொடுப்பதையும் தனக்கு பிடிக்காதோர் நிகழ்ச்சிக்கு வரும் போது அவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கேள்விகளை தொடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது இதற்க்கு உதாரணமாக அண்மையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் செவ்வியையும் பிரதியமைச்சர் ஹரீசின் செவ்வியையும் இன்னும் பலத்தையும் சுட்டிக்காட்டலாம்.
இனி வரும் காலங்களில் “குட்டியாடு குடலேற பெருத்தாலும் வழுக்கள் வழுக்கள் தான்” எனும் பழமொழி போன்று தனது செயற்பாடுகளை செய்யாது தனது ஆசைகளுக்கு களமமைக்கும் இடமாக அதிர்வு நிகழ்ச்சியை பயன்படுத்தாது சகோ.தனராஜின் கேள்விகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கி நிகழ்ச்சியை வழிநடத்துமாறு நான் ஒரு பார்வையாளனாக வேண்டிக்கொள்கிறேன்.
றிஸ்வான் அபூபக்கர்
இறக்காமம்


Comments
Post a Comment