முஸ்லிம் கூட்டமைப்பில் ரிசாத் அதாவுல்லாஹ்


புதி­தாக அமை­ய­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் தேசிய காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான அதா­வுல்லாஹ் ஆகிய இரு­வரும் தங்­க­ளது கட்­சிகள் இணைந்து கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

முஸ்லிம் கூட்­ட­மைப்பின் உரு­வாக்கம் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் கொள்­கை­ய­ளவில் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் அப்துல் ரஹ்­மா­னுடன் மீண்டும் ஒரு பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெ­ற­வுள்­ளது என்றார்.

இதே­வேளை தேசிய காங்­கி­ரஸின் தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான அதா­வுல்­லா­வு­ட­னான முஸ்லிம் கூட்­ட­மைப்பின் பேச்­சு­வார்த்­தை­யொன்று கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு கொழும்பில் இடம்­பெற்­றது. இப்­பேச்­சு­வார்த்­தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத், தொழி­ல­திபர் நஸார் ஹாஜி ஆகியோர் கலந்து கொண்­டனர்.

இப்­பேச்­சு­வார்த்­தை­யின்­போது, தேசிய காங்­கி­ரஸின் தலைவர்  அதா­வுல்லா கூட்­ட­மைப்பில் இணைந்­து­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்தார். முஸ்லிம் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் தேர்­தல்­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது, மக்­களின் ஆத­ர­வினை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லின்­போது ஆரா­யப்­பட்­டது.

நாட்டில் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் மற்றும் அவற்­றுக்­கெ­தி­ராக எவ்­வாறு குரல் கொடுப்­பது என்­பது பற்­றியும் சந்­திப்பின் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. முஸ்லிம் கூட்­ட­மைப்பு வெறும் தேர்­தலை நோக்­காகக் கொண்டு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை, தேர்­தலில் களம் இறங்­கு­வது மாத்­தி­ர­மல்ல பிர­தான நோக்கம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு குரல் கொடுப்­பதும், இது தொடர்பில் அர­சாங்­கத்தின் கவ­னத்தை ஈர்க்கச் செய்­வ­துமே முக்­கிய நோக்கம்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து வெகு விரைவில் கொழும்பில் மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது என்றார். 

Comments