FCID அதிகாரிக்கு எதிராக நாமல் முறைப்பாடு


பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரி ஒருவர் தனக்கு எதிராக போலி முறைப்பாடு சமர்ப்பித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் நிவாரண சேவை பிரிவில் முறைப்பாடு சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி தனது சகோதரர் ரோஹித ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினமும் தான் பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக அந்த அதிகாரி போலி கருத்து வெளியிடுவதற்கு எதிராக நாமல் ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.

நாமல் தனது சட்டதரணி பிரேமநாத் சீ.தொலவத்தையுடன் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இவ்வாறு குறித்த அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

Comments