ரோஹிங்யா அகதிகள் விடுவிக்கப்பட்டு இரத்மலானை வீட்டில் தங்கவைப்பு (Photos)
மிரிஹான தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 32 மியன்மார், ரோஹிங்யா அகதிகளும் விடுவிக்கப்பட்டு இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம் பெற்றுக்கொடுக்கும் வரை கல்கிஸ்ஸை பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் ஐ.நா சபையின் யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனம் நடவடிக்கை எடுத்து வந்தது.
மியன்மார் ரோஹிங்யா அகதிகள் படகில் தத்தளித்த நிலையில் இலங்கை வடக்கு கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Comments
Post a Comment