ROHINGYA? பிறந்த தேசத்தில் நாடட்டவரான சமூகம்


இந்தியா,பங்களாதேஷ் மேற்கிலும் தாய்லாந்து,சீனா வடமேற்கையும் எல்லையாகக் கொண்ட தென்ஆசிய நாடே பர்மா.மிக நீண்டகால குடியேற்றவாதம் மற்றும் இராணுவ ஆட்சிக்குள்ளாகி சர்வதேசத்தில் மனித உரிமை மீறலுக்கு முதலிடம் வகிக்கும் நாடாகும்.1989ம் ஆண்டு தனது பெயரை பர்மா என்பதை மாற்றி மியன்மார் என்ற புதுப் பெயரை ஐநா சபை மற்றும் பலநாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றது.இருந்தும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் மியன்மார் என்ற பெயரை உபயோகிக்க இதுவரை மறுத்துவருகின்றது.

ரோஹின்கயா முஸ்லீம்கள் மியன்மாரில் 800 000வாழ்ந்தாலும் Rakhine என்ற மாநிலத்திலே அதிகம் வாழ்கின்றனர்.1400ம் ஆண்டளவில் முஸ்லீம்கள் குடியேற ஆரம்பித்தனர்.இவர்கள் வங்களாதேசத்தில் இருந்து அதிகமாக குடியேறினர்.பௌத்த மன்னராக இருந்த Min Saw Mun இவர்களை நாட்டில் குடியேற அனுமதித்து இராணுவம் மற்றும் பல நிர்வாகத் துறைகளில் வேளைவாய்ப்புகளை வழங்கினார்.1785ல் நாட்டின் வேறுபகுதியில் வாழ்ந்த பர்மியர்கள் Rakhineல் குடியேறத் தொடங்கினர்.1826ல் பிரித்தானியா Rakhine பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சியமைத்தனர்.இவர்கள் விவசாயம் மற்றும் இதர கூலி வேளைகளுக்காக அதிகமானவர்களை வங்களாதேச பிரதேசத்தில் இருந்து கொண்டுவந்து குடியமர்த்தினர்.பர்மாவின் ஏனைய பிரதேதத்தில் இருந்தும் முஸ்லீம்கள் இப்பிரதேசத்தில் குடியேறியதால் முஸ்லீம்கள் தொகை அதிகமானது.ஆங்கிலயரே *ரோஹின்கயா** என உத்தியோகபூர்வமாக அழைத்தனர்.Rohang என்ற சொல்லில் இருந்து வந்ததே *Rohingya* என்ற பெயராகும்.இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது ஐப்பானுக்கு எதிரான யுத்தத்தில் ஆங்கிலயருக்கு பக்கபலமாக ரோஹின்கயா முஸ்லீம்கள் இருந்தனர்.ஆங்கிலர் பின்னர் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.

ஆங்கிலயர் காலத்தில் ரோஹின்கயா முஸ்லீம்கள் இராணுவத்தில் உயர் பதவிகளில் மட்டுமல்ல பர்மாவின் வியாபாரம்,ஏற்றுமதி,உற்பத்தி,நிர்வாகம் மற்றும் பலதுறைகளில் முக்கிய பதவிகளில் இருந்தனர்.4 -ஜனவரி 1948ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.இருந்தும் 1962வரையே ஜனநாயம் நிலவியது.

1960ல் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு அமைச்சரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1962ம் ஆண்டு இராணுவ ஆட்சியாளரான Ne Win புரட்சிமூலம் பர்மாவின் அதிபரானார்.இந்த நேரத்தில் இப்பிரதேச முஸ்லீம்கள் மீது கொண்டிருந்த கோபத்தை ஐப்பான் இந்த ஆட்சியாளர் மூலம் முதன்முதலாக பழிதீர்க்க ஆரம்பித்தது.இதுதான் முஸ்லீம்களுக்கும் பர்மிய மக்களுக்கும் இடையில் உண்டான முதல் இனவாத வன்முறையாகும். அதிபர் Ne Win சகல முஸ்லீம்களையும் இராணுவ மற்றும் அரச உத்தியோகத்தில் இருந்து இரண்டு நாட்களுல் நீக்கினார்.

சுமார் 1962-2011 வரை இராணுவ தளபதிகளாலே நாடு ஆட்சி செய்யப்பட்டது.ஒவ்வொரு தளபதியின் காலத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வன்னமே இருந்தது.குறிப்பாக Junta என்ற தளபதியின் ஆட்சியிலே இவர்கள் நாட்ட்டவர்கள் என்ற முழுப் பிரகடனம் அறிமுகமானது.

தற்போது நடமுறையில் உள்ள அரசியலமைப்பு முஸ்லீம்களை சட்டபூர்வமாக நாடற்றவர்களாக்கியது.இந்த அரசியலமைப்பின் பிரிவு 21(b) ;;;நாட்டின் பிரஜைகள் தங்களது தங்களது மதசுதந்திரத்தை இயலுமானவரை அனுபவிக்கலாம்.இது நாட்டின் சட்டம் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தாக இருந்தாலும்;;;இந்தப் பிரிவே முஸ்லீம்களை தாக்கவும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களைத் தாக்கவும் பௌத்த பிக்குகளுக்கு அதிகாரத்தை வழங்கியது.இதன் மூலம் பௌத்த பிக்குகள் நாட்டின் அதிஉச்ச சக்திவாயந்தவர்களாக மாறத் தொடங்கினர்.இதனால் ஐப்பான்,நேபால்,பூட்டன் போன்ற நாடகளில் இருந்து தீவிரவாத பௌத்த மதகுருமாரும்,அமைப்புகளும் பர்மாவில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர்.

இதனால் முஸ்லீம்கள் தொடர்ந்து மலேசியா,தாய்லாந்து,பிலிப்பயினஸ் மற்றும் இந்தனோசியாவிற்கு இடம்பெயர்ந்த கொண்டே இருந்தனர்.2015ல் அதிகமான 10000கு மேற்பட்ட அகதிகளுக்கு பிலிப்பயின்ஸ் நாடே முன்வந்து முகாம் அமைத்து இடம்கொடுத்தது.ஆகவே தற்போதைய வன்முறை இறுதியாக எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றும் 
நடவடிக்கையே.இதுவரை காலமும் சுமார் 40 வருடங்களாக இந்த மக்கள் இதே இனச்சுத்திகரிப்பையே எதிர்கொண்டனர்.சர்வதேசம் மற்றும் ஊடகங்கள் முழுமையாக சகலவற்றையும் மூடிமறைத்து ஒரு இனத்தையே நாடற்ற மக்களாக்கியது.இதற்கு ஜநாசபை மற்றும் ஜனநாயகம் பேசுகின்ற சகல நாடுகளும் முழுப் பொறுப்பைஏற்க வேண்டும்.
2001ம் ஆண்டு தலிபான்களால் காபூலில் பௌத்த சிலைகள் உடைக்கப்பட்ட போது பர்மா அரசாங்கம் பகிரங்கமாக எதிர்த்ததோடுனுடனடியாக நிறுத்துமாறு தலிபான் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பினர்.இதற்கு தலிபான் வழங்கிய பதில் பர்மிய அரசாங்கத்தை முஸ்லீம்கள் மீது வெறித்தனமான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது.

அடுத்து நடந்த உலகத்தையே உலுக்கிய 11 September 2011 அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதல்.இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த போது பர்மா அரசாங்கம் முஸ்லீம்கள் மீது அடிக கண்காணிப்புகளையும் முஸ்லீம் அமைப்புகள் மீதும் கடுமையான விதிகளை விதித்தது.குறிப்பாக முஸ்லீம்கள் கூட்டம் கூடுதல்,அமைப்பு ரீதியாக செயற்படுதல்,வெளிநாடுகளுக்கு பயணித்தல் மற்றும் பள்ளிவாசல்களில் கூட்டம் கூடுதல் விடயங்களில் தடைகளை ஏற்படுத்தியது.குறிப்பாக ஆயிரக்கணக்கில் ஹஜ்ஜிற்காக சென்ற பர்மிய முஸ்லீம்களுக்கு கடவுச் சீட்டுவழங்குவதை நிறுத்தியதோடு 200பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கங்கியது.

அத்துடன் நாட்டில் இதற்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தனர்.இதற்கு வங்களாதேஷ் மற்றும் சில அரபுநாடுகள் உதவிகளை வழங்கியது.இதனை சாதகமாக்கிய பர்மிய அரசு இவர்களை இஸ்லாமியத் தீவரவாதிகளாக அடையாளப்படுத்தி,தனது மனிதாபிமானம் அற்ற இனச் சுத்திகரிப்பை சர்வதேச ரீதியில் நியாயப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்காக மனித உரிமை சாரந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் சுமூகமான உறவுகளை மேற்கொண்டது.தனது நாட்டின் மீது சர்வதேசம் கொண்டிருந்த அபகீரத்தியை நீக்கி ,,ஐனநாயகம் உதயமாகும் நாடாக வேஷமிடத் தொடங்கியது.குறிப்பாக அமெரிக்காவின் கைப்பிள்ளையாக மாறத் தொடங்கியது.இதற்காக பலவருடங்களா சிறையில் இருந்த வரும் சர்வதேச நோபல் பரிசு பெற்றவருமான Aung Sang Sun Kyi என்பவரை விடுதலை செய்து முழு உலகத்தின் பாராட்டையும் உதவிகளையும் பெறத் தொடங்கியது.

இதன் பின்னரை ஏற்கனவே பல ஆண்டுகளாக முஸ்லீம்களை திட்டமிட்டு சர்வதேசம் எதிர்த்தும் அழித்த பர்மிய அரசாங்கம்,சர்வதேசத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாக முத்திரையிட்டு,,அதிஉச்ச இனச்சுத்திகரிப்பை அரங்கேற்றியது.

இந்த நிலையில் இந்த மக்களை அகதிகளாக ஏற்றுக் கொள்வதில் பலநாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது.குறிப்பாக பலநூற்றாண்டுகளாக பர்மாவில் வாழ்ந்து,அவர்களின் மொழி,கலாச்சாரம் மற்றும் உடைஅலங்காரத்தை தனித்துவமாகக் கொண்ட மக்களை **நாடடற்றவர்கள்**எனப் திரகடனம் செய்ததை ஐநா சபை முழுமையாக நிராகரித்துள்ளது.சொந்த நாட்டு மக்களை,நாட்டுக்காக பல்வேறு அர்ப்பணிப்பு செய்த சுமார் 10%கு அதிகமான முஸ்லீம்களை பௌத்த தீவிரவாதம் நாடட்டவர்களாக்கியுள்ளது. பர்மாவில் முஸ்லீம்கள் 10%மாக இருந்தும் சர்வதேசத்திற்கு 4%என்ற பிழையான 1948ம் ஆண்டு கணிப்பீடே இதுவரை காட்டப்படுகிறது.

1-பர்மா தன்னை ஜனநாயக நாடாக உலகிற்கு காட்ட போலியான பலமுற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதால்?
2-பர்மிய முஸ்லீம்கள் தீவிர இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என காட்டப்பட்டதால்?

3-பர்மாவை சோஷலீச மற்றும் பாஷிஷக் கொள்கையில் இருந்து மீட்டு மேற்கத்திய கொள்கைக்கு சரணடையவைக்க வேண்டியதேவை உள்ளதால்?
4-யப்பான் போன்ற சோஷலிஷ சித்தாந்தங்களை வெறுக்கும் ஐனநாயக நாடுகள் பர்மாவை தனது கட்டுப்பாட்டில் வைத்டிருக்க விரும்புவதால்?
5-தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தயும் பொருளாதார பலப்பரீட்சையையும் நடாத்தும் வல்லரசுகளுக்கு பர்மாவுடன் உறவு வைத்திருப்பது அவசியமாகயுள்ளது?

6-அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்களதேஷத்தில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் செயற்படுகிறது.இந்த நிலையில் பர்மாவை பௌத்த நாடாக வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்கும்?
போன்ற பல காரணங்களாலே சர்வதேசம் இன்னும் பாராமுகமாக உள்ளது.இலங்கையில் உருவான பௌத்த இனவாத செயற்பாடுகள் ,இந்தியாவின் குஜ்ராத் தாக்குதல் மற்றும் பாமர் மஸூதி தாக்குதல் போன்றன பர்மாவின் தாக்கமே.

இருந்தும் தற்போது துருக்கி உற்பட பல இஸ்லாமிய நாடுகள் பர்மிய முஸ்லீம்கள் விடயத்தில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் முன்னெடுப்பது பாராட்டத்தக்கது.
இந்த மக்கள் சொந்த நாட்டில் மீண்டும் குடியேறவும்,அவர்களின் வாழ்வாதார விடயங்கள் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.இதற்கு முதற்கட்டமாக ஐனநாயக விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுடைய அரசியலமைப்பு சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு மேலாக இந்த மக்களுக்காக எமது பிராத்தனைகளை அதிகரித்துக் கொள்வோம்.குறிப்பாக அறபா நோன்பில் இந்த மக்களின் நிம்மதிக்காகவும்,பாதுகாப்புக்கவும் பிராத்திப்போம்.

Fahmy Mohamed-UK
Solicitor & Human Rights Researcher
Mob:0044 7870763570

Comments