ஒரு நாளில் மட்டும் 104 காதல் ஜோடிகள் கைது: நடந்தது இதுதான்!


அநுராதபுர பொலிஸார் இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 104 காதல் ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற குறித்த சுற்றி வளைப்பில் மேலதிக வகுப்பிற்கு என்று கூறி வந்த மாணவர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நகரில் உள்ள பூங்காக்களில் காதல் ஜோடிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதாக பொலிஸாருக்கு கிடைத்த  முறைப்பாட்டை அடுத்து குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான எச்சரிக்கையின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.

Comments