அபிவிருத்திப் பெருவிழா என்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்றும் அடிக்கல் பெருவிழாவைத்தான் இற்றைக்கு 17 வருடங்களுக்கு மேலாக கிழக்கிலங்கையில் காண்கிறோம்.
இலங்கை முஸ்லிம் அரசியலில் அதிலும் குறிப்பாக கிழக்கில் அபிவிருத்தி மழை, அபிவிருத்தி வெள்ளம், அபிவிருத்தி சுனாமியெல்லாம் கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கதே. அந்த அபிவிருத்தி மழை, அபிவிருத்தி வெள்ளம், அபிவிருத்தி சுனாமியெல்லாம் அடிக்கல் நாட்டுதலுடனும் முந்தைய மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்திகளுக்கு தீந்தை பூசி மினிக்கி திறந்துவைத்தலுடனும் இருப்பதை கண்ணுள்ள எல்லோரும் கானாமலில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் பொத்துவிலில் நடப்பட்ட அடிக்கல்லுக்கு நிதிகிடைக்காமல் மண்ணினுள்ளே புதைதுகிடக்கும் கட்டிடமாக மாறியிருப்பதை அறியாமல் மீண்டும் இன்றைய தினம் அக்கரைப்பற்றில் அடிக்கல் நாட்ட முன்வந்திருக்கும் மு.காவின் குருட்டு தைரியத்தை பாராட்டுகிறேன்.
அம்பாறைக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த கிழக்கிலும் தேசிய அரசின் அமைச்சைக் கொண்டும்,மாகாண சபை அமைச்சைக்கொண்டும் பாரிய அபிவிருத்தி சூறாவளியை நிகழ்த்திவிட்டு வேடிக்கை பார்க்கும் குதிரையின் கோட்டைக்குள் பட்ட மரம் படங்காட்ட எடுத்திருக்கும் முயற்சி கைகூடாமல் போகும் செயல் என்பதை சகோ.தவம் நன்றாக அறிந்தவராகவே இருக்கிறார் என்பது அப்பட்டமான உண்மையும் கூட.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த தைரியம் இல்லாதவர்கள் தாங்கள் தோற்றுப் போய் விடுவோம் என்பதற்காக தங்களது பதவிகளை நீடிக்கச் செய்வதற்கு கிழக்கு மக்களின் தலையில் பாரிய இடியை நிகழ்த்தியிருக்கும் 20வது திருத்தச் சட்டமூலப் பிரேரனைக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மண்ணின் இதயத்தில் ஓட்டையை ஏற்படுத்திவிட்டு.. இன்று கிழக்கு மக்களின் அந்த சிந்தனையில் இருந்து திசை திருப்புவதற்காக பழைய கட்டிடங்களுக்கு தீந்தை பூசி நாடகம் அரங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அக்கரைபற்றை தெரிவு செய்திருப்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் கைகளால் தன்னைத்தானே தனது கைகளால் தனது தலையில் மண்ணை அள்ளிப்போட்டு தலைகளில் மண்ணாலான மழை பொழிய வைப்பதற்கு சமனாகும் என்பதை காலம் உணர்த்தும்.
றிஸ்வான் அபூபக்கர்.
இறக்காமம்
(அரேபிய தேசத்திலிருந்து.......)


Comments
Post a Comment