சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 17வது சிறார்த்த தின நிகழ்வு




சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 17வது சிறார்த்த தின நிகழ்வு சனிக்கிழமை (16) தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வு மூதூர் ஹாதி நீதவானும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் பிரதேசத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எஸ்.எம்.றிஸ்வான் மௌலவி தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் நினைவுரை, அவருக்கான துஆ பிரார்த்தனை போன்றனவும் இடம் பெற்றன.

Comments