படகு கவிழ்ந்து 19 பேர் மரணம்
இந்தியாவின் யமுனை நதியில் சென்ற பயணிகள் படகொன்று மூழ்கியதன் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பாக்பேட் பிரதேசத்திலிருந்து ஹரியானா நோக்கி சென்ற படகொன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாகவும் படகில் சுமார் 50 பேர் பயணித்துள்ளதாகவும் அதில் 10 பேர் நீந்தி கரையேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகளில் அதிகமான பெண்கள் இருந்துள்ளதோடு மூழ்கியவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
படகில் 35 பயணிகள் பயணிக்க முடியும் எனவும் அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையால் படகு மூழ்கியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கவலையடைந்துள்ள மக்கள் பொலிஸாருக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வாகனங்கள் சிலவற்றுக்கு தீ மூட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Comments
Post a Comment