சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல், 2 பேர் காயம்


கஞ்சா சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவின் மீது இன்று (20) மாலை கிரிபாவ பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நிக்கவரட்டி பொலிஸ் பிரிவின் ஊழல் மோசடி பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குழுவின் மீதே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மேற்கொண்ட பதில் தாக்குதலில் தாக்குதல் மேற்கொள்ள வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Comments