அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா?


குருணாகலில் புதிய தேசிய பாடசாலைக்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு சென்றிருந்த புகைப்பட ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் பாதுகாப்பு பிரிவு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிகழ்வு இடம்பெறும் இடத்திலிருந்து ஊடகவியலாளர்களை அங்கிருந்து அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

இவ்வளவு தூரத்தில் இருப்பதனால் யாருக்கும் சிரமம் இல்லை என்பதனை புரிய வைப்பதற்கு ஊடகவியலாளர்கள் முயற்சித்துள்ளனர்.

எனினும் அதனை புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் பாதுகாப்பு பிரிவினர் இருக்கவில்லை ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments