ஐ.நா பொதுச்சபையில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு ஜனாதிபதி உரை


ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்று (19) ஆரம்பமாகிய 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றினார்.

இந்த நிலையில், இலங்கை நேரப்படி நாளை (20) அதிகாலை 2:30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற உள்ளார்.

மக்களை மையப்படுத்திய உலகில் அனைவருக்கும் சமாதானமும் கண்ணியமும் மிக்க வாழ்க்கைக்காக பாடுபடல் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

இலங்கையின் அரசியல் இணக்கப்பாடு, நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்தும், 2017ஆம் ஆண்டை வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றியும், பசுமை அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் உலகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

Comments