ஆங்சாங் சூகிக்கு எதிராக 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் கையெழுத்து!
மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.
பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் நடக்கும் சம்பவங்களை எதிர்க்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளாக அகதிகளாக இடமாறி வருகிறார்கள்.
பெரும்பாலும் வங்காளதேசம் மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவை நோக்கி வருகிறார்கள். அவர்கள் எல்லை மாநிலங்களில் அகதிகளாக வசித்து வருகிறார்கள். 1990த்திற்கு பின்னர் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்து வருகிறது.
ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இப்போது ரோஹிங்யா இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என கூறியதற்கு வங்காளதேசம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படை தாக்குதலை தொடங்கி உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மீண்டும் வங்காளதேச எல்லையை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளனர். இப்போதும் 160000 பேர் அகதிகளாக வங்காளதேசம் நோக்கி சென்று உள்ளனர்.
ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் உலக நாடுகள் மியான்மருக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்பட வேண்டும் என்ற கோஷமும் உயர்ந்து உள்ளது. ஆங்சாங் சூகியின் நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது.
ஆனால் நோபல் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஒலவ் ஜோல்ஸ்டட், நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபலோ அல்லது நோபல் அறக்கட்டளையோ பரிசு வழங்கப்பட்டவர்களின் கவுரவத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளை வகுக்கவில்லை.
எனவே நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டவரிடம் இருந்து அந்த பரிசை பறிக்க முடியாது என கூறிவிட்டார். மியான்மரில் ஆங்சாங் சூகி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியதால் 1991-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Comments
Post a Comment