33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 27வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு - சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் விஷேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு சவுக்கடி மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் இராணுவ சீருடை தரித்தவர்களினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறவுகளை இழந்த குடும்ப உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

20.09.1990 அன்று இராணுவ சீருடை தரித்து வந்தவர்கள், பொது மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு மத சிசு உட்பட 26 பேரை கொடூரமான முறையில் கொலை செய்து, எரித்து இரண்டு குழிகளில் புதைத்துள்ளனர்.


இதன்போது தொழிலில் ஈடுபட்ட 7 பேர், நான்கு மாத சிசு, 10 சிறுவர்கள், முதியவர்கள் என 33 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments