திருகோணமலையில் எளிமையாகவும் அமைதியாகவும் முறையிலும் ஹஜ்ஹூப் பெருநாள்


-திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை அமைதியாகவும் மிக எளிமையான முறையிலும் புனித ஹஜ்ஹூப்பெருநாள் நேற்று கொண்டாடப்பட்டது

மூதூர், கிண்ணியா, குச்சவெளி, தோப்பூர், தம்பலகாமம் உள்ளிட்ட. அனேக முஸ்லிம் பிரதேசங்களில் இம்முறை புனித ஹஜ்ஜுப்பெருநாள் அமைதியாக ஆடம்பரமில்லாமல் எளிமையான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது, மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் அல்ஹஸ்ஸனாத் சமூக அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கூட்டுயெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதனை மௌலவி கரீம் கஸரத் நடாத்தினார். தோப்பூர் பெரிய முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மௌலவி அமீன் தொழுகையை நடாத்திவைத்தார்.

இதன்போது விசேட கூட்டு துஆப்பிராத்தனைகளும் நடாத்தப்பட்டது. காலையில் நேர காலத்தோடு பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிமூலம் தக்பீர் முழக்கம் ஒலிக்கப்பட்டன பள்ளிவாசல்களில் ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைகள் பெண்களுக்கு வேறாகவும் ஆண்களுக்கு வேறாகவும் நடாத்தப்பட்டது . மக்கள் நேரகாலத்தோடு ஆசை ஆர்வத்துடன் பள்ளிவாயல்களுக்கு வந்து கலந்துகொண்டு பெருநாள் தொழுகைகளிலும் வணக்கவழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

மியன்மாரியல் உள்ள ரோஹின்யா வில் அந் நாட்டின் பேரினவாத அரச பாதுகாப்பு படையினரால் அங்குள்ள முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கும் அடக்குமுறைக்கும் துன்புறுத்தல்களுக்கும் மனிதப்படுகொலைகளுக்கும் உள்ளாகியிருக்கும் ரோஹின்ய முஸ்லிம் மக்களுக்கும் அந்நாட்டின் முஸ்லிம் உம்மாவின் விடிவுக்காகவும் புனித ஹஜ்ஹூப்பெருநாள் தொழுகையை அடுத்து விசேட கூட்டு துஆப்பிராதனைகள் இங்குள்ள அனைத்துப்பள்ளிவாசல்களிலும் நடாத்தப்பட்டது . துஆப்பிராத்தனைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இரு கரம் ஏந்தி கண்ணீர் மல்கி இம்மக்களின் விடிவுக்காக இறைவனிடம் இரைஞ்சி அல்லாஹூவிடம் பிராத்தனை புரிந்தார்கள்.

மேலும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திகொண்டதுடன், ஸலாத்தையும் பகிர்ந்துகொண்டனர். இம்முறை பட்டாசு வெடிகளோ ஆடம்பரங்களோ குதூகலமான கொண்டாட்டங்களோ திருகோணமலையில் பெருநாள் நிகழ்வுகளின்போது இடம்பெற்றிருக்கவில்லை

மேலும் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்டு மக்கள் உழ்கியா எனப்படும் குர்பான் கொடுக்கும் அமல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

Ihzana Fareed

Comments