கீதாவை தேடிச் சென்ற மஹிந்த!


தீக் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நலன் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.

நேற்று மாலை மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கீதா குமாரசிங்க காயமடைந்தார். இதன் காரணமாக அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வரை அவசர சிகிச்சை பிரிவில் கீதா சிகிச்சை பெற்றதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments