கோமாநிலையான உணர்வுகள்
இலங்கையின் அதிகமான சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் உரிமைகளுக்காக பேசுகின்றனர்!
சண்டைபோடுகின்றனர்!
சட்டப் மற்றும் உரிமை பிரச்சனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றனர்!
கிண்ணியா மக்கள் பிரதிநிதிகளோ அபிவிருத்தி திட்டங்களில் சண்டை போடுகின்றனர்.இவர்கள் சமூகத்தின் எந்தப் பிரச்சனையை பற்றியும் பேசுவதோ?
பகிரங்கமாக விமர்சிப்பதோ?
மக்களுக்கு தெளிவூட்டுவதோ இல்லை?
அரசியலமைப்பு சீர்சிருத்தம் தொடர்பில் எதுவித கருத்தும் இல்லை!
உரிமைகள் தொடர்பில் விவாதிக்க தொலைக்காட்சிகள் அழைப்பதற்கு போவதில்லை?
கேவலம் கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் படம் எடுப்பதற்காக முகம்காட்டினர்.
சமூகத்தில் நம்பிக்கை வைப்பதை விடுத்து முகநூலை நம்பியே சிலர் அரசியல் நடாத்துகின்றனர்.மக்களை குழப்பத்தில் தினம் புதுக்கதை கூறி கோமாநிலையில் வைத்தள்ளனர்.
நியாயம் பேசுபவனை மட்டமாக தாக்குவதும்.நியாயத்தை உணரமுடியாமல் சமூகத்திற்கு முகநூளினூடாக சூழ்ச்சிகளால் அநீதி கற்பிக்கப்படுகிறது.
ஒன்றுமட்டும் உண்மை.முகநூளில் வீரவசனம் பேசுகின்ற,வம்புக்காக பதிவிடுகினறவர்கள் சமூகத்தில் நேரடியாக சென்றால் யதார்த்தத்தை உணரலாம்.
அறிவிற்கு அப்பாற்பட்டதும்,வருமானம் கிடைக்காததுமான சமூகத்தின் பிரச்சனைகளை மக்கள் பிரதிநிதிகள் பேசமாட்டார்கள்.பேசுபவர்களை அல்லக்சைகளை வைத்து நசுக்குவார்கள்.இதுதான் நமது ஊர் ஐனநாயகம்.
மக்களை ஏமாத்தி வாழ்வதற்கும் அவர்களை தொடர்ந்து கோமாநிலையில் வைத்திருக்கும் திறமைசாலியுமே தலைவராகலாம்.
*ஒருமுறை சந்தர்ப்பம் வழங்குவோம் *என்று நான்கு தலமுறைக்கு துரோகம் செய்தும் உணர்வில்லாத சமூகம்.நமது மக்கள் அரசியலில் காட்டும் நன்றிக்கடனுக்கு வானமே எல்லை.
ஜாவத்த பள்ளிவாசலில் இருந்த நஜீபும்,ஆசிரியராக இருந்த தௌபீக்கும்,கொழும்பில் வேளைபுரிந்த இம்ரானும்,கொந்தராத்து தொழில்புரிந்த மக்ரூபும் .இந்த சமூகத்திற்கு எதைச் சாதித்துவிட்டு அல்லது வழிநடாத்திவிட்டு அரசியலுக்கு வந்தனர்.
ஆகவே சமூகத்தில் இருந்து தூரமாகி இருந்தவர்கள்,மற்றவர்களின் மரணம் என்கின்ற அதிஷ்டலாபச் சீட்டுமூலம் அரசியலுக்கு வந்தவர்கள்.இதனால் தான் விட்டுப் போகாமலும்,மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காமலும் அரசியலை வியாபரமாக நடாத்துகின்றனர்.
குளம் வத்தும்வரை காத்திருந்து
குடல் வத்திச் செத்ததாம் கொக்கு!
இதுதான் நமது சமூகத்தின் தலைவிதி!
ஆகவே இளைஞர்களே நமது சமூகத்தின் மாற்றத்திற்காக இடங்களை பிடிப்பதும்,இடைவெளியை ஏற்படுத்துவதும் உங்கள் கைகளிலே.
அரசியலில் ஜால்ராபோடவும்,சீன்காட்டவும் அல்லக்கைகள் இருப்பது புதிய விடயமல்ல.இவர்கள் நாளை சமூகத்தின் தலமைத்துவத்தை நாம் எடுக்கும்போது எமது பக்கம் நிற்பார்கள்.இவர்களைப் பற்றி அலற்றிக் கொள்ளத் தேவையில்லை.இந்தயாவில் மரணவீட்டில் அழுவதற்காக பணத்துக்கு மாரடிக்கும் கூட்டத்தைப் போன்றவர்கள்.
நாம் தெளிவு பெறவேண்டும்.நமக்குள் நம்மை தேடிக் கொள்ள வேண்டும்.தலமுறைக்கும் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகிறோம்.நமக்குள் ஒற்றுமை இல்லாததும்,சுயமாக சிந்திக்க முடியாததுமே எமது அரசியல் தலைவர்களின் பலம்..நமது பலவீனம்!
நல்ல சிந்தனையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் தற்போது சரியான வழிகாட்டுதலுக்காக காத்திருக்கின்றனர்.இவர்களின் சிந்தனை ஓட்டத்தை சரியாக நெறிப்படுத்த வேண்டும்.எந்த அரசியல்வாதியினதும்,அல்லக்கைகளினதும் போலித்தாக்குதல்களுக்கு அப்பால் எனது அர்ப்பணிப்புகளைச் செய்கிறேன்.நாம் சகலரும் இந்த மாபியாக் கும்பலின் சூழ்ச்சிகளில் இருந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
வளிகலோடு போராடியே கற்கள் சிலையாகிறது!
மரணத்துடன் போராடியே பெண்
தாய்மையடைகிறது!
ஆகவே நமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நியாயமான போராட்டத்திற்கும்,அதனை முன்னெடுக்கும் தலமைத்துவத்திற்கும் தயாராகுவோம்.
நல்ல கருத்துக் கூறுபவர்களுக்கு அரசியலுக்கு ஆசைப்படுபவர்கள் என்ற கேவலமான முத்திரை இடுகிறோம்.இதன் மூலம் தனிஒருவனை அடங்க வைத்து முழுச் சமூகத்தையும் இருட்டில் வாழ்வதற்கு காரணமாகிறோம்.
எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் 2020 பொதுத் தேர்தல்கள் நமது மாற்றத்திற்கான பலப்பரீட்சையாக அமையவேண்டும்.போராட்டமிக்க போட்டியாக இருப்பதே நமக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
இன்ஷா அல்லாஹ்
நீ.நான்.!!என்ற வியாக்கியானத்துக்கு அப்பால் நாம் !என்ற பொதுமைப்பாட்டில் ஒன்றுபடவேண்டும்.
நமது கிண்ணியாவில் மிகக்கடினமானதும்,மிக்க தூரமானதுமான ஒன்றாகும்.இருந்தும் நாம் இதற்கான விதைகளை இடவேண்டும்.நாளைய சமூகமாவது அருவடை செய்வதற்கு விட்டுச் செல்வோம்.

Comments
Post a Comment