ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நாபீர் பெளண்டேசனினால் ஒரு தொகை பணம் கையளிப்பு..

Ihzana Fareed

கல்குடா ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையானது தற்பொழுது புதிய கல்வி சுற்று நிரூபத்தின் கீழ் ஊட்டல் பாடசாலையாக இருந்து வருகின்றது. குறித்த பாடாசாலைக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற காணியினை கொள்வனவு செய்வதற்காக சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபதக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் நேற்று 11.09.2017 ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு  நேரடியாக விஜயம் செய்து பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் அதிபர் ஜனாபா செய்னம்பு ஹமீட்டிடம் ஒரு தொகை பணத்தினை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
பிரதேசத்தில் மிகவும் வறுமை கோடிற்கு கீழ் வாழுக்கின்ற மக்கள் மத்தியில் அமையப்பெற்றுள்ள குறித்த பாடசாலையானது ஆரம்ப சிறார்கள் ஆரோக்கியமாக கல்வி கற்பதற்கான இடம் பற்றாக்குறை, திறந்த வெளியில் காலை நேர உடற்பயிற்சிகள் செய்ய முடியாத நிலை, மற்றும் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டட வசதி இன்மை, சிறார்கள் விளையாடுவதற்கு ஓர் திறந்த வெளி இன்மை அல்லது போதிய இடம் பாற்றாக்குறை போன்ற பல குறைபாடுகளை கொண்டே 1988ம் ஆண்டு தொடக்கம் பிரதேசத்தில் எவரும் கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் மேற் குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் இயங்கி வருகின்றமையினை மிக முக்கியமாக கல்குடா முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டிய விடயமாகும்.
அந்த வகையில் அல்லாவிற்கு மிகவும் விருப்பாமன நிலையான தர்மம் என்ற வகையில் ஓட்டமாவடி ஹிஜ்ரா ஆரம்ப ஊட்டல் பாடசலைக்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்ற இட பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுப்பது கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற ஒவ்வொருத்தரினதும் கடமையாகும் என்பதனை பாடசாலை சமூகமும், நிருவாகவும் ஞாபகப்படுத்தி கொள்ளும் அதே நேரத்தில் உதவிகளை குறைவில்லாமல் வாரி வழங்கி பாடசாலையின் தேவையினை பூர்த்தி செய்து தருமாறு வேண்டி நிற்கின்றது.  அத்தோடு இது வரைக்கும் முடியுமான வரையில் உதவிகளை செய்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும்  நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் பாடசலை நிருவாகம் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றது.


Comments