கால்வாய்களில் குப்பை கொட்டுவது தடுக்கப்பட வேண்டும்: பைசர் முஸ்தபா
கொழும்பு நகரில் உள்ள கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட வேண்டும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று கொழும்பு, வௌ்ளவத்தைப் பிரதேசத்தில் கால்வாய்கள் வழியாக கண்காணிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர், கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுப் பொருட்கள், குப்பைகள் என்பன கழிவுநீரில் கொட்டப்படுகின்றன.
அவ்வாறான கழிவுகள் காரணமாக கழிவுநீர்க் கால்வாய்கள் அடைத்துக் கொள்வதால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் ஏழை மக்கள் மழைக்காலங்களில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் உலகின் மிகப் பழைமை வாய்ந்த வர்த்தக கேந்திரமான கொழும்பு நகரின் அழகும் கெட்டுப் போகின்றது.
எனவே வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து உரிய முறையில் அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment