திஹாரியவில் முஸ்லிம் வர்த்தகரின் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதம்
திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.
வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே இப்பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment