நிகாப் அணிந்து “ தூள் கடத்தியவர் ஒரு ஆண் பதுளையில் அதிர்ச்சிகர சம்பவம்
அபூ ஷிபா – பதுளை.
நேரம் நள்ளிரவு இரவு 12:10, இடம், பதுளை பொது பஸ் தரிப்பு நிலையம் , நிகாப் அணிந்த ஒருவர் பசறை வழி செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கின்றார். தனியார் பஸ் கட்டுப்பாட்டு அதிகாரியும் மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC) யின் உறுப்பினருமான அஸ்லம் அவர்களின் கண்கள் குறித்த நிகாப் அணிந்தவரை நோட்டமிடுகின்றது. ஒரு முஸ்லிம் பெண் தன்னந் தனியாக நள்ளிரவில் பஸ் தரிப்பு நிலையத்தில் ……….!
பஸ் கட்டுப்பாட்டாளர் அஸ்லமின் பொறுமை கட்டுக்கடங்கவில்லை. குறித்த பெண் அருகில் செல்கின்றார். “ஓயா கவ்த”…….? ( நீங்கள் யார் ) சிங்களத்தில் கேட்கின்றார்.
“எனக்கு சிங்களம் தெரியாது”. தமிழிலேயே பதில் சொல்கின்றார் அந்த நிகாப் அணிந்த பெண். இவரது குரலில் தடுமாற்றமும் செயற்கை தன்மையும் வெளிப்படுகின்றது .
உடனே காரியாலயத்திலிருந்த பெண் உத்தியோகத்தர்களை உதவிக்கு அழைத்து இவரை பரிசோதிக்கச் சொல்கின்றார் அதிகாரி அஸ்லம். உடனடியாக காரியத்திலிறங்கிய அந்த சிங்களச் சகோதரிகள் “ மெயா கெஹனு கெநெக் நேமேய் “ இவர் ஒரு பெண் அல்ல என்று கூச்சல் போடுகின்றார்கள்.
உடனடியாக செயல்பட்ட அஸ்லம் அவர்கள் குறித்த நபரின் தலையை மூடியிருந்த “நிகாப்” பை கழட்டிவிட்டு முகத்தை பார்க்கையில் நன்றாக சவரம் செய்யப் பட்ட முகமும் சாயம் பூசப் பட்ட உதடுகளும் வெளிப்பட்டுள்ளது. மறுகையால் இவரை பிடித்துக்கொண்டு அங்கு இரவு கடமையில் ஈடு பட்டிருந்த போலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து இவரை ஒப்படைத்து மேலதிக நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளார்.
பதுளை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்ட மேற்படி நிகாப் வேடமிட்ட சந்தேக நபர் பதுளை போலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் எரிக் அவர்களின் தலைமையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். விசாரணையின் போது இவர் தமது “குத” வழியில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திவருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர் பெயர் ஜெயவர்தன என்றும் இவர் தெமோதர நா உள்ள எனுமிடத்தில் வசிப்பதாகவும் இவருக்கு வயது 26 என்றும் தெரிய வந்துள்ளது. குறித்த நபரை எதிர்வரும் 29 ந் திகதிவரை பதுளை போலிஸ் காவலில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சகோதரர் அஸ்லமின் விழிப்பால் பாரியதொரு குற்றச் செயல் தடுக்கப் பட்டதுடன் , சிலவேளை நடைபெறவிருந்த இன்னுமொரு இனவாத செயல் தடுக்கப் பட்டிருக்கலாம். இவ்வாறான திட்டமிட்ட நாசகார செயற்பாடுகள் நாட்டில் வேறு பிரதேசங்களிலும் நடைபெறலாம். எமக்கு தேவை அஸ்லம்மை போல் விழிப்பான இளைஞர்களே.

Comments
Post a Comment