ரோகிங்யா முஸ்லிம்களுக்காக இன்று குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்


மியன்மார் அரசு அந் நாட்டு ரோகிங்கியா முஸ்லீம்கள் மக்கள் மீது நடாத்தி வரும் மனிதப் படு கொலைகளை கண்டிந்து குச்சவெளியில் 6 ஆந் திகதி குச்சவெளி ஜம்யத்துல் உலமாசபை மற்றும் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் இணைந்து நடத்திய பேரணியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மியன்மார் அரசு ரோகிங்கியா முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொண்டுண்டுவரும் மனித படுகொலைகளுக்கு எதிர்ப்பகு தெரிவித்தும் ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் தலையிட்டு முஸ்லிம் மக்கள் வகை தொகையின்றி படுகொலை செய்யப்படுவதனை தடை செய்யக்கோரியும் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரியும் இந்த கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Comments