ஜனாதிபதி தாத்தா
ஆரிஃப் எஸ் நளீம்
மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி ஜதுரிகா சிறிசேன இந் நூலை எழுதியுள்ளார்.
அன்று முதல் இன்று வரையிலான தான் அறிந்த தனது தந்தை பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அவர் எதிர் நோக்கிய சவால்கள் என அதில் எழுதியுள்ளாராம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வரலாற்று நிகழ்வுகள் எழுதப்படுகிற போது இஸ்மாயில் எனும் கதாபாத்திரம் அத்துடன் இணைக்கப்படவில்லை என்றால் அவ்வரலாறு முற்றுப்பெற்றதாக நிறைவு பெற்றதாக கருதமுடியாது.
மைத்திரிபாலவின் அரசியல் வரலாற்றில் இருந்து இஸ்மாயில் எனும் காதாநாயகனை மறைக்கவோ மறுக்கவோ புறமொதுக்கவோ முடியாது.
UNP கோட்டை என சொல்லப்பட்ட பொலன்னறுவை தேர்தல் தொகுதியை லோட் நெல்சனிடம் இருந்து வெற்றி கொள்ள மைத்திரி பாலவுடன் இணைந்து பகிரத பிரயத்தனம் மேற்கொண்டவர் மர்ஹூம் இஸ்மாயில். சு.கட்சியின், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தனக்கு என இருந்த ஒரே ஒரு அரிசி ஆலையையும் அடகு வைத்தார்.
மட்டுமல்லாது ரோஸி என பெயரிடப்பட்டிருந்த ISUZU TXD ரக லொரியும் விற்பனை செய்தார். எனது சிறிய வயதில் ரமழான் காலங்களில் பச்சை பள்ளிவாயலில் வாங்கிய கஞ்சி வாளியுடன் மர்ஹும் இஸ்மாயில் வீட்டுக்கு ஐஸ் தண்ணீர் எடுக்க போயிருக்கிறேன் பல தடவை அங்கே மைத்திரிபால சிறிசேன மர்ஹூம் இஸ்மாயில் அவர்களுடன் கதைத்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.
மர்ஹூம் இஸ்மாயிலை பார்த்தால் எங்களுக்கு நடுக்கம் பிடிக்கும் யாருக்கும் அஞ்சாத தைரியம்மிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார்.அக்காலப்பகுதியில் ரணில் UNP ஐ விட்டு சென்றாலும் நான் கட்சியை விட்டு செல்ல மாட்டேன் என சொல்லிக்கொண்டு திறிந்த உடையிலும் பாவனை பொருளிலும் பச்சை நிறத்தை பயன்படுத்தும்(இன்றும் அதே போலதான்) தீவிர UNP ஆதரவாளரான பச்சை பண்டய்யா ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கட்டி வைக்கப்பட்டு ரயில் அருகே வருகையில் கட்டு அவிழ்த்து விடப்பட்டார்.

மர்ஹும் இஸ்மாயிலே தன்னை ரயில் தண்டவாளத்தில் கட்டி வைத்ததாகவும் அது மயிர்கூச்செறியும் பயங்கர சம்பவம் என்றும் அந்த நிகழ்வை மறந்து வளமைக்கு திரும்ப நீண்ட நாள் எடுத்ததாகவும் பண்டய்யா இப்போது கேட்டாலும் சிறித்துக்கொண்டே சொல்வார்.
எனவேதான் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பல சவால்களை எதிர்கொண்டவர் மர்ஹூம் இஸ்மாயில். இது போல பல சம்பங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது.இவைகளையெல்லாம் ஜதுரிக சிறிசேன மறந்திருக்க வாய்பில்லை.அவரின் ஜனாதிபதி தாத்தா எனும் நூலில் மர்ஹூம் இஸ்மாயிலை பற்றியும் எழுதி இருப்பார் என நம்புகிறேன்.

Comments
Post a Comment