இஸ்ரேல் மியன்மாருக்கு ஆயுதம் வழங்குகின்றது
மியன்மார் அரசாங்கம் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மை மக்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்கின்றது என்ற சர்வதேச குற்றச்சாட்டுக்கள் கூர்மையடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தொடர்ந்தும் மியன்மாருக்கு பெருந்தொகை ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது.
ஆயுத விற்பனைக்கெதிரான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலின் ஆயுத விற்பனை குறித்து தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எவிக்டோர் லீபெ மன் கருத்து வெளியிடுகையில், “இது ராஜதந்திர விவகாரம்” எனக் கூறியுள்ளார்.
மியன்மாருக்கு இஸ்ரேல் விற்பனை செய்துள்ள ஆயுதங்களில் 100 யுத்த தாங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கனரக படகுகள் என்பன உள்ளடங்குகின்றன. ரோஹிங்யா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தொடர்வதற்கும் மியன்மார் எல்லைப் புறப் பாதுகாப்பை பலப்படுத்தவும் இஸ்ரேல் வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மியன்மார் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மியன்மார் மீது ஆயுதத் தடைகளை விதித்துள்ளன.
ஜூனில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் லீபெமன், இஸ்ரேல் ஆயுத வியாபாரத்தில் உலகின் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடான அமெரிக்காவுடன் இணைந்து செல்கின்றது என்றார். சர்வதேச அளவில் ஆயுத விற்பனை தொடர்பான சட்டங்களை இஸ்ரேல் மதித்துச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்த வழக்கை இம்மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இஸ்ரேலிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments
Post a Comment