பொலன்னறுவை சிறையில் கைதியொருவர் திடீர் மரணம்
பொலன்னறுவை சிறைச்சாலையில் கைதியொருவர் திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் கழிவறையின் வடிகானில் வீழ்ந்திருந்த நிலையில் சிறைக்காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் உடனடியாக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கொலை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment