இலங்கையில் மூன்று பெருநாட்களை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்களே என சில ஆலிம்கள் வேதனைப்படுவது அர்த்தமற்றதாகும் !
மார்க்கம் தெளிவாக தெரியும் போது இலங்கையில் மூன்று பெருநாட்களை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்களே என சில ஆலிம்கள் வேதனைப்படுவது அர்த்தமற்றதாகும்
1.கணிப்பீட்டு பெருநாள். அது நேற்று. இது மார்க்கத்துக்கு முரண்.
2. மக்கா பிறையின் அடிப்படையில் இன்று உலகளாவிய முஸ்லிம்களின் பெருநாள்.
3. இலங்கை உலமா சபையின் அறிவித்தல் படியான ஹஜ் பெருநாள் நாளை.
சில உலமாக்கள் ஒரே தலைமைத்துவத்தை பின்பற்றி நாளை இலங்கையில் பெருநாள் என்கிறார்கள். ஒரே தலைமைத்துவம் என்பது ஊருக்கு ஒன்று நாட்டுக்கு ஒன்று உலகளாவிய ரீதியில் ஒன்று எனப்படும்.
ஒரு ஊரின் தேவையான ஒரு பிரச்சினைக்கு ஊர்த்தலைமையை நாடலாம். ஒரு நாட்டின் பிரச்சினைக்கு நாட்டின் தலைமைக்கு கட்டுப்படலாம். முழு உலகளாவிய முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் உலகளாவிய தலைமைத்துவத்தையே பின்பற்ற வேண்டும்.
ஹஜ் பெருநாள் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. அது உலகளாவிய முஸ்லிம்களுக்கானது. அந்த வகையில் எந்த இடத்துக்கு ஹாஜிகள் சென்றுள்ளார்களோ எந்த இடத்தில் அரபா உள்ளதோ எந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்வை வைத்து உழ்ஹிய்யா கடமையானதோ அந்த இடமான புனித மக்காவின் பிறை அறிவித்தலை ஏற்பதும் மக்காவில் உள்ள 25 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளை கொண்டாடும் போது அவர்களுடன் இணைந்து இது விடயத்தில் உலகளாவிய ஒரே தலைமைத்துவமான மக்கா தலைமைத்துவத்தை ஏற்று நமது பெருநாளை எடுப்போமாகில் உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வித்திட்டவர்களாவோம் என்பதை உலமாக்களும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
-
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி


//அந்த வகையில் எந்த இடத்துக்கு ஹாஜிகள் சென்றுள்ளார்களோ எந்த இடத்தில் அரபா உள்ளதோ எந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்வை வைத்து உழ்ஹிய்யா கடமையானதோ அந்த இடமான புனித மக்காவின் பிறை அறிவித்தலை ஏற்பதும் // நியாயம!
ReplyDeleteஹஜ்ஜில் நடைபெறும் உழுஹிய்யாவை ஏற்று, இங்கும் உழுஹிய்யாக் கொடுக்கும் நமக்கு,அங்கு அது நடக்கும் நாளை ஏற்று அத்தினத்திலேயே அதனைக.கொடுக்க மனம் வருவதில்லை.