மியன்மாரைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அஷ்ரப் ஏ சமத்
மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டு வரும் அட்டூழியங்களை எதிர்த்தும் கொழும்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து தெவட்டகஹ பள்ளிவாசல் அருகில் ஆரம்பமான கண்டனப் பேரணி கொழும்பு, ரொஸ்மிட் பிளேசில் உள்ள மியன்மார் தூதரகம் வரை சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தின் முடிவில் தூதரக காவலாளியிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் ஐ.நா முன்பாக கையெழுத்து போராட்டாம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முஜிபு ரஹ்மான், எஸ்.எம். மரிக்காா், அசாத் சாலி, ரியாஸ் சாலி, மாகாண சபை உறுப்பினர் அர்சாத், உட்பட பிரமுகர்களும் பொதுமக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Comments
Post a Comment