அவர் சிறைக்குச் செல்ல நான்தான் காரணம்! மகிந்த பேச்சு


நான் ஜனாதிபதியாக இருக்கும் போது லலித் வீரத்துங்கவிற்கு உத்தரவு கொடுத்ததற்கு அமைவாக அவர் செயற்பட்டார். இதன் காரணமாகே அவரை இன்று சிறையில் அடைதுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் - கொபைகனே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச கொள்கை ஒன்றின் பிரகாரமே கடந்த காலத்தில் பிக்குமார்களுக்கான ஆடைகள் விநியோகிக்கப்பட்டது. ஆனால் அது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அது செய்யப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கைது செய்ததன் மூலம் முழு அரச பணியாளர்களுகம் தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க கைது செய்யப்பட்டமையானது ஒரு அரசியல் பழிவாங்கள் ஆகும்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது கொடுத்த உத்தரவொன்றிற்கு அமைய செயற்பட்டமையினாலேயே, இன்று லலித் வீரத்துங்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments