எஸ்.பீ. – சுசில் இடையே சூடான கருத்து மோதல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்தவுக்கும், எஸ்.பீ. திஸாநாயக்கவுக்கும் இடையில் சூடான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக அமைச்சரவைக் கூட்டம் சூடாகக் காணப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி தலையிட்டே இருவருக்கிடையிலான சர்ச்சை தீர்த்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


Comments
Post a Comment