பர்மாவில் புத்தம் போதிக்கும் யுத்தம்..
ஒர் மிகபெரிய கொடுமைக்கு ஒட்டு மொத்த இனம் ஆளாகின்ற போது கண்களை மூடிக்கொண்டு இருப்பதானது உலகிற்கிற்கு ஒர் பெரிய விடயம் அல்ல.
அகிம்சையை# போதித்த புத்தர்களின் புதல்வர்கள் எதற்காக ஆயுதம் எடுத்தார்கள் என்பதே சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.
நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெருகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.
தற்போதைக்கு (இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை) சுமார் 3000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பௌத மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது. பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மர் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும்காணப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார். இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.
மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.
வேண்டாத முஸ்லிம் சிறுபான்மையினரை பர்மிய இராணுவத்தினர் கையாளும் விதம் குறித்த தகவல்களை இரகசியமாக வைக்கவே பர்மிய அரசு முயல்கிறது என்றே கூறவேண்டும்.
கொடூரமான கொலைகள், மோசமான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தமக்கு இழைக்கப்பட்டதாக அவர்களிடம் இருந்து வெளியாகும் காணொளிகள் பறைசாற்றுகின்றன. ,
மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாகிருப்பது அசின் விராது, இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.
இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கானமுஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளில் மியன்மாரில் இருந்து சுமார் 120000 க்கும் அதிகமானவர்கள் படகுகள் மூலம் தப்பிச் செல்ல முயன்று கடலில் தத்தளித்து காணமல் போயுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தகவல் மையம் தெரிவிக்கின்றது.அது மட்டுமல்லமல்லாமல் 10000 மேற்பட்ட மக்கள் கொல்லப்ட்டும் 23000 மேற்பட்ட மக்கள் காணமலும் போய் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.
இவ்வாறான நேரம் எமது துருக்கி ஐனாதிபதியின் பங்களாதசுக்கான அழைப்பு உலக முஸ்லிம்களின் மனதில் சற்று ஆறுதலை தந்துள்ளது எனலாம்.ஒரு சில நாடுகள் இது மியன்மாரின் இறைமையை பாதிக்கும் கூற்றாக உள்ளது என எர்துக்கானை சாடினாலும் பெருமளவிளான நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
எது எப்படியோ இவ் மக்களிக்காக எமது தொழுகையிலும் தூஆக்களை சேர்த்துக்கொள்வோம்.....றோகிங்யோ மக்களின் இரத்தம் கரைபடிந்த நாட்கள் முற்றுப்பெறவேண்டும்.இதுவே எனதும் உங்களதும் பிரார்தனையாக இருக்கட்டும்.
அ.ற.மு.அஸாம்


Comments
Post a Comment