சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை


மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் வகையில், சுவாச பரிசோதனை (எல்கோலைசர் டெஸ்ட்) குழாய்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 486 பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 90,000 குழாய்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Comments