அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் 6 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.
வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம், உள்ளிட்ட 08 மாவட்டங்களில் நேற்று (12) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைக்கு இணையான கவனயீர்ப்புப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் 8 மாவட்டங்களிலிருந்தும் ஆரம்பிக்கப்படும் பேரணி எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டள்ளது.


Comments
Post a Comment