புதிய வீடமைப்பு திட்டம்

பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்

அம்பகமுவ பிரதேசம்  வெலிஓயா தோட்டத்திற்கான 30 வீடுகளை கொண்ட புதிய வீடமைப்பு திட்டம் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க தேசிய வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் அனுசரனையில் தற்போது நிர்மாணிக்கபட்டு வருகின்றது

இந்த வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வெகு விரைவில் நடைபெற இருப்பதால் இராஜாங்க அமைச்சர் இந்த வேலைத்திட்டங்ளை நேரில் சென்று பார்வையிட்டார் இவருடன்  மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாரம் மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் பனிப்பாளர் எம். கனகராஜ்¸  முன்னனியின்  சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன்  முன்னனியின் பிரதி  பொது செயலாளர் ஏம் பிரசாந்   உட்பட   மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Comments