நாளை கிழக்கில் கடையடைத்து கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு பசீர் சேகுதாவூத் கோரிக்கை!
கிழக்கு மாகாணத்தில் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு சம்மதம் தெரிவித்து நிறைவேற்றிய பிரேரணையைக் கண்டிக்கும் வகையில் கிழக்கு வாழ் மக்களைக் கடையடைப்புச் செய்யுமாறு "கிழக்கு நமதே " என்ற சிவில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை காலத்தின் தேவையாகும். சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்த அரைகுறை அதிகாரத்தையும் தங்கத் தட்டில் வைத்துப் பேரினவாதப் பெரும்பான்மையிடம் மீளக் கையளித்த சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளான அதிகார வணங்கிகளைக் கண்டிப்பதற்கு இக்கடையடைப்பு எனும் எளிய வழிமுறையாவது அவசியமாகும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
கிழக்கின் கடை உரிமையாளர்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறேன்


Comments
Post a Comment