(வீடியோ).,முதலமைச்சர் நசீர் கல்குடாவிலும் பிறருடைய கட்டடங்களை அத்துமீறி திறந்து வைப்பதனை வன்மையாக கண்டிக்கின்றோம்..ஐ.ரி.அஸ்மி

Ihzana Fareed

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அடாவடித்தனத்தினையும், வங்குறோத்து அரசியல் கலாச்சாரத்தினையும், அரசியல் நாகரீகமற்ர அரசியல் அதிகாரத்தினையும் பயண்படுத்தி கல்குடாவின் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முழு பங்களிப்புடனும் கொண்டு வரப்பட்ட ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் ஆரம்ப, ஊட்டல் பாடசாலைக்கான மூன்று மாடி கட்டத்தினை நாளை புதன் கிழமை (13.09.2017) அன்று திறந்து வைக்க இருக்கின்ற விடயத்தினை தான் வன்மையாக கண்டிப்பதாக முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும், பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் பங்காளியுமான ஐ.ரி.அஸ்மி தெரிவிக்கின்றார்.
மேலும் தனது கருத்தினை கல்குடா மக்களுக்கும் தேசியத்திற்கும் தெளிவு படுத்திய அஸ்மி… கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற அமீர் அலி வித்தியாலயம், உதுமான் வித்தியாலயம், சரிஃப் அலி வித்தியாலயம், ஆயிஷா பாலிகா, ஹைராத் வித்தியாலயம், ஸாஹிறா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளை பிரதி அமைச்சர் அமீர் அலி தனது அரசியல் காலத்திற்குள் எவ்வாறு உருவாக்கினாரோ அதே போன்ற ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவின் ஆரம்ப பாடசாலையாகவும் அதனோடு சேர்த்து ஊட்டல் பாடசாலையாகவும் இருக்கின்ற தாருல் உலூம் பாடசாலையினை பல சிரமங்களை எதிர்கொண்டு உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் பாடசாலையினை ஆரம்பிக்கின்ற பொழுது பாடசாலைக்கான காணி பிரச்சனையினை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்துடன் முன்னின்று கலந்துரையாடி காணியினையும் பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்த பெருமையும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கே உரியது.
அந்த வகையில் பாடசாலைக்கு உடனடி தேவையாக இருந்த கட்டட தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு தான் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தனது முழு பங்களிப்புடன் இரண்டு மாடிக்கான கட்டத்தினையும் பெற்றுகொடுத்தார். அதற்கு பிற்பாடு கிழக்கு முதலமைச்சர் மூன்றாம் மாடிக்கான அடிக்கல் என இலங்கை வரலாற்றில் எங்கும் இல்லாதாவாறு இரண்டாம் மாடிக்கு சென்று அடிக்கல் நாட்டிய வரலாறு முதலைச்சர் ஹாலிஸ் நசீரினையே சாறும் என நினைக்கின்றேன். 
குறித்த கட்டத்திற்குறிய கட்ட வேலைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலேயே இருந்தது. பிரதி அமைச்சர் அமீர் அலி மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்றதன் பிற்பாடு முதலமைச்சர் தனது வங்குறோத்து அரசியல் கலாச்சாரத்தினையும், தனது முதலமைச்சர் எனும் அதிகாரத்தினையும் பயண்படுத்தி இரண்டாம் மாடிக்கு வந்து அடிக்கல் நாட்டி விழா எடுத்தமையானது அரசியல் வரலாறுகளில் எங்கும் நடை பெறாதா அரசியல் நாகரீகமற்ற வங்குறோத்து அரசியல் கலாச்சாரமாகவே பார்க்கப்படுவதோடு, மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது.
இவ்வாறு நாளை 13.09.207 ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் முதலமைச்சர் நசீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட உள்ள மூன்று மாடி கட்டடம் சம்பந்தமாக தனது எதிர்ப்பினையும், ஆதங்கத்தினையும், உண்மை நிலையினையும், மன வேதனையினையும் வெளிப்படுத்திய முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியின் முழுமையான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..

Comments