பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் பெறப்பட்ட பத்து கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி

காத்தான்குடி மக்களுக்கு தேவையான தரமான அபிவிருத்திகளை தனது அயராத முயற்சியினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கும், மத்திய அரசின் அமைச்சுக்களுக்கும், பல பாரிய திட்ட முன்மொழிவுகளை வழங்கியதன் பயனாக காத்தான்குடி நகரினை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து கோடி ரூபா செலவிலான பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் 2017.09.12ஆந்திகதி-செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எம்.எம். ஸபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாபில் நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நசீர் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

62 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் கட்டி முடிக்கப்பட்ட  வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா, 15 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி மட்/மம/ஸாஹிரா வலது குறைந்தோர் விஷேட  
பாடசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல், 88 இலட்சம் டூபா செலவில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேல் மாடி கட்டிடத்திற்கான அடிக்கல், 10 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி வாசிகசாலை மேம்படுத்தலுக்கான ஆரம்பிப்பு நிகழ்வு, 35 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி பரீட் நகர் (மானருள் ஹூதா பள்ளிவாயல் அருகாமை) உள்ளக வீதிக்கான அடிக்கல் மற்றும் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர் (ஜனலங்கா கடைக்கு அருகாமை) 
உள்ளக வீதிக்கான அடிக்கல்

01 கோடி ரூபா செலவில் கடற்கரை வீதி சிறுவர் பூங்கா மேம்படுத்தலுக்கான ஆரம்பிப்பு, 01 கோடி 88 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் வீதி வடிகானுக்கான அடிக்கல், 41 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி மத்திய வீதி (பெண்சந்தை வீதி) வடிகானுக்கான அடிக்கல், 01 கோடி ரூபா செலவில் புதிய காத்தான்குடி சின்னத்தோன மேம்படுத்தலுக்கான ஆரம்பிப்பு, 66 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி SNT லேன், உள்ளக வீதிக்கான அடிக்கல், 39 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி அப்றார் வீதி உள்ளக வீதி மற்றும் வடிகானுக்கான அடிக்கல். 

மேலும், 64 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி அப்றார் வீதி வடிகானுக்கான அடிக்கல், 46 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி 1ம் குறுக்கு வீதி மற்றும் விடுதி வீதி 4ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல், 46 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி 3ம் குறுக்கு வீதி மற்றும் விடுதி வீதி 5ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல், 98 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி வடிகானுக்கான அடிக்கல் என்பன அதிதிகளினால் நடப்பட்டு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திரு. சித்திரவேல், காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பை, பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுருதீன் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.










Comments