இப்போதும் ஞானசார தேரரை விஜேதாச ராஜபக்‌ஷ தானா பாதுகாக்கிறார் ?



ஐப்பான் சென்ற ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு,இம்முறை அன்புளிப்பாக வாங்கி வந்து கொடுத்த பொருளை அறிய விரும்புவதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது....

இவ்வரசானது முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்து நீக்கிய சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் ஜப்பான் சென்றிருந்தார். இவ்விரண்டையும் சாதகமாக பயன்படுத்தி அரசியல் செய்ய முனைந்த இவ்வரசின் விசுவாசிகள், அவர் தங்களுக்கு ஆதரவளித்து வந்த விஜயதாஸ ராஜபக்ஸ அமைச்சிலிருந்து நீக்கப்பட்டதற்கு அஞ்சியே ஜப்பான் சென்றார் என்ற பரப்புரையை மேற்கொண்டார்கள்.

தற்போது பார்த்தால், அவர் ஜப்பான் சென்று ஊடகவியலாளர் மாநாடு நடாத்துகிறார். இப்போது அவரை காப்பாற்றப் போவது யார்? விஜயதாஸ ராஜபக்ஸ நீதியமைச்சிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாரே! அவர் ஜப்பானிலிருந்து இவ்வாட்சியாளர்கள் கொண்டுவந்த பரிசுப் பொருட்கள் தான் அவரை காப்பாற்றப்போகிறதோ தெரியவில்லை.

நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்ட, நீதி மன்றத்துக்கு விசாரணைகளுக்கு செல்ல வேண்டிய, நீதி மன்றத்துக்கு செல்லாமல் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் எப்படி ஜப்பான் சென்று வந்தார். அவர் மந்திரத்தை பயன்படுத்தி மறைந்து சென்றாரா?

தற்போது விமான நிலையங்கள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் விரல் அடையாளத்தை கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. ஞானசார தேரர் ஏற்கனவே ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இவர் முக்காட்டை மூடிக்கொண்டு ஜப்பான் சென்றாலும், இவர் தான் ஞானசார தேரர் என்பதை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.

இவர் நீதி மன்றம் செல்லாமையினால், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்து. பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தும் இவர், ஏன் கைது செய்யப்படவில்லை. இன்னும் இவ் ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விஜயதாஸ ராஜபக்ஸ போன்றோர் காப்பாற்றுகிறார்கள் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Comments