திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வின் பாதக விளைவுகளையும் ஆராய வேண்டும்

:திருமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.அருந்தவராசா(காணி)

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் ஆற்றின் மூலம் அடித்து வருகின்ற மணல் திருகோணமலையிலே வந்து சேர்கிறது. இவற்றை அகழவில்லை என்றால் மணல் மேடுகள் ஏற்பட்டு ஆறுகள் உடைப்பெடுக்க நேரிடும்.

எனவே மணல் அகழ்வு இடம் பெறத்தான் வேண்டியுள்ளது. அதில் உள்ள பாதகங்கள் தொடர்பான பக்கத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட மேலுதிக அரசாங்க அதிபர் (காணி) கே.அருந்தவராஜா தெரிவித்தார்.

நேற்று 28ம் திகதி திருகோணமலை மாவட்ட ஊடகயலாளர்களுக்கு இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் செயலமர்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது

தற்போது நாட்டில் இடம் பெற்று வருகின்ற பாரிய அபிவிருத்திக்கு இந்த மணல் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.எனினும் இவ் அகழ்வுகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. என்பதையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் ஊடகவியலாளர்களாகிய நீங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கின்ற புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை பல அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது பலர் மணல் அகழ்வு தொடர்பாக பல்வேறு செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளீர்கள். எனினும் இன்னுமொரு பக்கத்திணையும் ஆராய வேண்டும் என்ற விடயத்தையும் என்னுடைய கருத்தாக தெரிவித்துக் கொள்கின்றேன்.என மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.அருந்தவராஜா தெரிவித்தார்

Comments