கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் விரைவில் கைது
அடுத்த தேர்தலுக்கு முன்னர் கடந்த காலத்தில் நடந்த கொலைகள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான பல வழக்குகள் சம்பந்தமான குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை தாமதம் செய்து வருவதாக கூறப்பட்டாலும் நீதியமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்தமை, கடத்திச் சென்று தாக்கியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் சிலவும் இதில் அடங்கும்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களம், அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் காலங்களில் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சர்ச்சைக்குரிய சில வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சிலரும் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


Comments
Post a Comment