மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு நாபீர் பெளண்டேசனிடம் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்.
இஹ்சனா பரீட்
கல்குடா பிரதேசத்தில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ள மீராவோடை சக்தி வித்தியால மைதான காணி பிரச்சனையுடன் தொடர்புபட்டுள்ள எல்லை கிராமங்களின் காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினர் இன்று சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீரினை அவரது சம்மாந்துரை அலுவலகத்தில் சந்தித்து வேண்டுகோலுடனான மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
குறித்த காணி பிரச்சனை சமப்ந்தமாக கல்குடா தொகுதியின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் எல்லைகள் அன்றிருந்த மீராவோடை எனும் இன்றைய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், சபை ஆகிய நிருவாக எல்லைக்குட்பட்ட 207ஏ மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் பதுரியா நகர் மீராவோடை தமிழ் கிராம சேவை பிரிவுகளின் எல்லைகளில் அமைந்துள்ள பாரம்பரிய முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முற்படும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் மீராவோடை தமிழ் கிராம சேவகரும், மீராவோடை சக்தி வித்தியாலய அதிபரும், கல்குடா கல்வி வலய பணிமனையும் போன்றவைகளினுடைய சமகால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பொறியியலாளர் நாபீரிடம் விளக்கமாக பாதிக்கப்பட்டவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு குறித்த காணி சமப்ந்தமான பிரச்சனைக்குறிய வழக்கொன்று வாழைச்சேனை பொலீசாரினால் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளதனால் அதற்கான தீர்வு கிடைக்கும் வரைக்கும் பொறுமையுடன் இருக்க வேண்டிய விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களிடன் நாபீர் பெளண்டேசனினால் விளக்கமளிக்கப்பட்டதோடு, நீதி மன்ற வழக்குகளுக்கான செலவீனங்களின் ஒரு பங்கினை நாபீர் பெளண்டேசன் பொறுப்பெடுப்பதோடு நீதிமன்ற வழக்கினை மேற்கொண்டு செல்வதற்க்கான பூரண ஒத்துளைபினையும் ஆலோசனைகளைகளையும் வழங்குவற்கு தயாராக நாபீர் பெலண்டேசன் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்களிடன் உறுதியளிக்கப்பட்டது

Comments
Post a Comment